தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ஊராட்சி தலைவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஊராட்சி தலைவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஊராட்சி தலைவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : மார் 10, 2024 07:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2024 07:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம், : விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை அலுவலகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து ஊராட்சி தலைவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நடந்த கூட்டத்திற்கு, ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி தலைமை தாங்கினார்.

மனித உரிமை சமூக நீதி பிரிவு உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், மாவட்ட தொழில் மைய புள்ளி ஆய்வாளர் மகேஷ்குமார், தாட்கோ அலுவலக அதிகாரி கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தனர்.

மாவட்ட அரசு விழிப்பு கண்காணிப்பு குழு உறுப்பினர் வழக்கறிஞர் அகத்தியன் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில், பஞ்சாயத்துராஜ் சட்டங்கள், வன்கொடுமை தடுப்புச் சட்டங்கள், வன்கொடுமையால் பாதித்தோருக்கு வழங்கும் தீருதவி மற்றும் இதர நலத்திட்டங்கள். வன்கொடுமை தடுப்புச் சட்ட தண்டனைகள்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான சமூக நலத்திட்டங்கள், தாட்கோ திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.

விக்கிரவாண்டி, கண்டமங்கலம் ஊராட்சி தலைவர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us