/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : மார் 01, 2024 10:36 PM
வானுார் : வானுார் அடுத்த திருவக்கரை அரசு உயர்நிலைப்பள்ளியில், சைல்டு லைன் சார்பில், குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் அன்பழகன் தலைமை தாங்கினார். திண்டிவனம் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, அதேகொம் பெண்கள் கன்னிய மைய உளவியல் ஆலோசகர் எட்டியப்பன் ஆகியோர், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்தும், அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் சிறப்புரையாற்றினர்.
பள்ளிக்கு வரும் குழந்தைகள் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்வது குறித்தும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு அரசு மூலம் கிடைக்கும் உதவிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் குழந்தை திருமண உறுதிமொழியேற்கப்பட்டது.

