ADDED : ஜூன் 07, 2025 01:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம்,: கண்டாச்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வனத்துறை சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் ஜெயந்தி தலைமை தாங்கினார். உதவித் தலைமை ஆசிரியர் சாமுண்டீஸ்வரி, வனக்காவலர் சுகுமாரன் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் ராஜாத்தி வரவேற்றார். பிளாஸ்டிக் பயன்பாட்டு குறைப்பு குறித்து உறுதி மொழி ஏற்பு நடந்தது. வனபகுதி அதிகரிப்பு குறித்து வனவர் சுகுமாரன் பேசினார்.
வனத்துறை விழிப்புணர்வு ஓவியம், கட்டுரை போட்டி நடந்தது. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. தாவரவியல் ஆசிரியர் தனலட்சுமி நன்றி கூறினார்.