ADDED : ஜூன் 17, 2025 11:45 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீசார் சார்பில், சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் இ.எஸ்., நர்சிங் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, சைபர் கிரைம் பிரிவு ஏ.டி.எஸ்.பி., தினகரன் தலைமை தாங்கினார். மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., இளமுருகன் முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, சப் இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் ஆகியோர், சைபர் கிரைம் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கான எதிரான குற்றங்கள் குறித்தும், ஓ.டி.பி., தொடர்பான குற்றங்கள் குறித்தும், தனிநபர் கடன், டிஜிட்டல் அரஸ்ட், லோன் விண்ணப்பங்கள், பள்ளி உதவிதொகை, பகுதிநேர வேலை, சைபர் கிரைம் இலவச உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, விழிப்புணர்வு துண்டு பிரசூரங்கள் கல்லுாரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.