ADDED : பிப் 06, 2026 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: வானுார் அரசு கல்லுாரியில் பாலின உணர்திறன் சங்கம் சார்பில் பாலியல் உளவியல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பாலின உணர்திறன் சங்க ஒருங்கிணைப்பாளர் காந்திமதி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கி பேசினார்.
ஆங்கிலத்துறை மாணவி சுவிதா, பொது இடங்களில், பெண்கள் பாதிக்கப்பட்டு வருவது குறித்தும், ஆங்கிலத்துறை மாணவர் சஞ்சய், சமூக ஏற்ற தாழ்வுகளை குறைத்து நேர்மறையான எண்ணங்களுடன் செயல்பட்டால் பாலியன வேற்றுமை களையப்படும் என்றார். ஆங்கிலத்துறை தலைவர் ராஜேஸ்வரி ஜெயராணி நன்றி கூறினார்.

