/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஸ்ரீரங்கபூபதி கல்லூரியில் விழிப்புணர்வு ஊர்வலம்
/
ஸ்ரீரங்கபூபதி கல்லூரியில் விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : டிச 25, 2025 06:48 AM

செஞ்சி: செஞ்சியில், ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லூரி சார்பில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
சிங்கவரம் சாலையில் துவங்கிய ஊர்வலத்திற்கு தாளாளர் ரங்கபூபதி தலைமை தாங்கினார்.
செயலாளர் ஸ்ரீபதி முன்னிலை வகித்தார். கல்லுாரி சி.இ.ஓ., மணிகண்டன் வரவேற்றார்.
செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். சிங்கவரம் சாலை, காந்தி பஜார், திண்டிவனம் சாலை வழியாக ஊர்வலம் அரசு மருத்துவமனை அருகே முடிவடைந்தது.
இதில் பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி, முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்செல்வன், பி.எட்., முதல்வர்கள் கோவிந்தராஜ், செந்தில்குமார், எம்.எட்., முதல்வர் சசிகுமார், நர்சிங் முதல்வர் உதய சங்கரி, பொறியியல் கல்லூரி முதல்வர் பாவேந்தன், பார்மஸி கல்லூரி துணை முதல்வர் விஜயகுமார் மற்றும் பேராசிரியர்கள் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

