/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கண்தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்
/
கண்தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜூலை 26, 2025 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் மணிலா நகர் லயன்ஸ் சங்கம் சார்பில், கண்தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
காமராஜர் சிலை அருகிலிருந்து துவங்கிய ஊர்வலத்தை சங்க மாவட்ட தலைவர் சிவகாந்தன் துவக்கி வைத்தார். மண்டல தலைவர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பாலாஜி வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.
முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலத்தில் அப்போலோ சமுதாய கல்லுாரி மாணவிகள் பங்கேற்றனர். சங்க நிர்வாகிகள் சிவக்குமார், பிரான்சிஸ், ராஜா, முருகன், விஜயகுமார், வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.