ADDED : ஜூலை 17, 2025 12:32 AM

திண்டிவனம் : திண்டிவனம் சமரச மையத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணியில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.
அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையிலுள்ள வழக்குகளை மத்தியஸ்த சமரச தீர்வு மையத்தின் மூலம் விரைவில் தீர்வு காணும் பொருட்டு, திண்டிவனம் சமரச மையத்தின் சார்பில் நேற்று காலை விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இந்திராகாந்தி பஸ் நிலையத்திருந்து புறப்பட்ட பேரணியில், நீதிமன்ற மத்தியஸ்தர்கள் கிருபாகரன், நாகையா, பாலசந்திரன், பாலசுப்ரமணியன், வழக்கறிஞர்கள் கார்த்திக், ராகவி, சரஸ்வதி சட்ட கல்லூரி பேராசிரியர்கள் , சமரச சார்பு மைய பொறுப்பாளர்கள் மற்றும் சட்டக்கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர். நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்த பேரணியில் பங்கேற்றவர்கள், பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். பேரணி, தீர்த்தக்குளத்தில் முடிவடைந்தது.

