ADDED : செப் 30, 2025 07:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : கிளியனுார் ரங்கபூபதி நர்சிங் கல்லுாரி சார்பில் இதய தின விழிப்புணர்வு ஊர்வலம் திண்டிவனத்தில் நடந்தது.
கல்லுாரி சேர்மன் ரங்க பூபதி ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் மேனகா காந்தி வரவேற்றார். முக்கிய சாலைகள் வழியாக விழிப்புணர்வு பதாகைகளுடன் மாணவ, மாணவிகள் கோஷம் எழுப்பியபடி சென்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப் இன்ஸ்பெக்டர்கள் செல்வதுரை, அய்யனார் மற்றும் துணை முதல்வர் மாலதி, பேராசிரியர்கள் வனிதா, கலைமதி, கோசலை, சுகந்தி, பிரதீபா மற்றும் பி.எஸ்.சி., நர்சிங், ஜி.என்.எம்., - ஏ.என்.எம்., மாணவர்கள் பங்கேற்றனர்.