ADDED : அக் 26, 2025 10:40 PM

திண்டிவனம்: திண்டிவனம் அருகே கருவம்பாக்கத்தில் ஸ்ரீ தரம்சந்த் ஜெயின் பள்ளி சார்பில், டிஸ்லெக்சியா வாரத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பள்ளியின் என்.சி.சி., மாணவர்கள் உட்பட 5 முதல் 8ம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். டிஸ்லெக்சியா விழிப்புணர்வு, கற்றல் வேறுபாடுள்ள குழந்தைகளை புரிந்து கொள்ளுதல், ஏற்று கொள்ளுதல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த ஊர்வலம், உலக போலியோ தினத்தில் நடந்ததால், மாணவர்கள் போலியோ ஒழிப்பு, சுகாதார பராமரிப்பு குறித்த கோஷங்களை முழக்கமிட்டு சென்றனர்.
முன்னதாக ஊர்வலத்தை பள்ளி முதல்வர் சாந்தி பாலச்சந்தர், அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் அனுராக் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
ஏற்பாடுகளை, பள்ளி தாளாளர் பப்ளாசா, செயலாளர் ஜின்ராஜ், பொருளாளர் நவீன்குமார் ஆகியோர் செய்தனர்.
