ADDED : செப் 08, 2026 05:40 PM
அ நிறம் | அளவு
திண்டிவனம்: திண்டிவனத்தில் கண்தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது.
சோழமண்டலம் லயன்ஸ் சங்கம், காமராஜர் லியோ சங்கம், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை ஆகியன இணைந்து நேற்று காலை தாலுகா அலுவலகம் எதிரில் கண்தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.
பேரணிக்கு, சோழ மண்டலம் லயன்ஸ் சங்கத்தின் சாசன தலைவர் அன்னை சந்தானம் தலைமை தாங்கினார். செயலாளர் அயுப் அலி வரவேற்றார்.
மாவட்ட தலைமை மருத்துவமனை டாக்டர் கோதை ராஜேஸ்வரி கொடியசைத்து துவக்கி வைத்தார். நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று விழிப்புணர்வு பேரணியில், டாக்டர்கள் சரண்யாசுருதி, ரவிச்சந்திரன் மற்றும் தனியார் கல்லுாரி மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
லயன் சங்க நிர்வாகி பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.
