ADDED : செப் 29, 2026 05:12 PM
விக்கிரவாண்டி: விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உலக இருதய தின விழா விழிப்புணர்வு பேரணி மற்றும் போட்டிகள் நடந்தது.
முண்டியம்பாக்கத்தில் உள்ள மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் நடந்த பேரணிக்கு கல்லுாரி டீன் லுாஸி நிர்மல் மெடோனா தலைமை தாங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பேரணியில் பங்கேற்ற மயிலம் செவிலியர் கல்லூரி மாணவர்கள், இருதயம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.
பின்னர் கல்லுாரி அரங்கில் நடந்த கட்டுரை ,வினா–விடை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு கல்லுாரி துறை தலைவர் ரபீக் பாபு , டாக்டர் கதிர்வேலு முன்னிலை வகித்தனர். மருத்துவ கண்காணிப்பாளர் ரவிக்குமார் வரவேற்றார்.
கல்லுாரி துணை முதல்வர் அனிதா ஆர்.எம்.ஓ ., ரவிக்குமார், ஏ.ஆர்.எம்.ஓ .,வெங்கடேசன், பொதுநல மருத்துவ துறை தலைவர் சுப்பிரமணி, டாக்டர் பாபு, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
