ADDED : அக் 01, 2026 05:07 AM

அ நிறம் | அளவு
மயிலம்: இரட்டணை ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின், என்.எஸ்.எஸ்., திட்ட முகாம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பேரணிக்கு ஹோலி ஏஞ்சல் பள்ளி குழும சேர்மன் பழனியப்பன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.
திட்ட அலுவலர் ராமமூர்த்தி வரவேற்றார். என்.எஸ்.எஸ் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுந்தரம், தலைமை ஆசிரியர்கள் பெருமாள், பட்டதாரி ஆசிரியர் தட்சிணாமூர்த்தி வாழ்த்தி பேசினர்.
மேலும், ஆசிரியர்கள் மாசிலாமணி, பாலசந்தர் ஆகியோர் பேசினர். இதில் மாணவ-மாணவியர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தை துாய்மை செய்தனர் .
