தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விழிப்புணர்வு கருத்தரங்கம்

 விழிப்புணர்வு கருத்தரங்கம்

 விழிப்புணர்வு கருத்தரங்கம்


ADDED : ஜன 10, 2026 06:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2026 06:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் அண்ணா அரசு கல்லுாரியில் பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

கல்லுாரி பாலின உளவியல் கண்காணிப்புக் குழு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம், மாவட்ட குற்றப்பிரிவு இணைந்து நடத்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். பாலின உளவியல் கண்காணிப்பு குழு தலைவர் கலைச்செல்வி வரவேற்றார். ஆங்கில துறை தலைவர் ஸ்ரீதேவி, பாலின சமத்துவம் மற்றும் உளவியல் மாற்றங்கள் குறித்தும், நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் குணசேகர் சமூகப் பணிகளில் மாணவர்களின் பங்களிப்பு மற்றும் விழிப்புணர்வின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.

இன்ஸ்பெக்டர் கீதா பாலியல் குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்வது மற்றும் சட்ட ரீதியான பாதுகாப்புகள் குறித்து விளக்கமளித்தார். ஏ.டி.எஸ்.பி., இளமுருகன், சைபர் கிரைம் மற்றும் பாலியல் சீண்டல்களுக்கு எதிராக காவல் துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர், நீதிபதி ஜெயசந்திரன், பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான சட்ட உதவிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

கருத்தரங்கில் பேராசிரியர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us