/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண்களுக்கான விழிப்புணர்வு சிறப்பு பரிசோதனை முகாம்
/
பெண்களுக்கான விழிப்புணர்வு சிறப்பு பரிசோதனை முகாம்
பெண்களுக்கான விழிப்புணர்வு சிறப்பு பரிசோதனை முகாம்
பெண்களுக்கான விழிப்புணர்வு சிறப்பு பரிசோதனை முகாம்
ADDED : மார் 15, 2024 12:05 AM

விழுப்புரம்: பிரியம் பெண்கள் சிகிச்சை மையம் மற்றும் பிரியம் ஸ்கேன்ஸ் சார்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு மற்றும் சிறப்பு பரிசோதனை முகாம் நடந்தது.
விழுப்புரம் தனலட்சுமி கார்டனில் உள்ள ஜெயம் நலம் மருத்துவமனையில் நடந்த முகாமில், மகளிர் சார்ந்த கர்ப்பப்பை பரிசோதனை, ரத்தசோகை பரிசோதனை, சர்க்கரை அளவு பரிசோதனை, மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் ஸ்கேன் ஆகியவை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பரிசோதனையை பெண்கள் மற்றும் மகப்பேறு டாக்டர் நித்திய பிரியதர்ஷினி செய்து, உரிய மருத்துவ ஆலோசனை வழங்கினார். முகாம், மகளிர் தினத்தை யொட்டி, இந்த மாதம் முழுதும் புதன், வியாழன், வெள்ளிக் கிழமைகளில் மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது.
இந்த பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன் அனைத்தும் முகாமில் பங்கேற்கும் பெண்களுக்கு குறைந்த கட்டணத்தில் பார்க்கப்படுகிறது. முகாமில் பங்கேற்க விரும்புவோர், 81110 21921, 80562 77001 ஆகிய மொபைல் எண்களில் முன்பதிவு செய்ய வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

