sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 தேர்தலுக்கு தயாராகும் விழிப்புணர்வு வாகனம்

/

 தேர்தலுக்கு தயாராகும் விழிப்புணர்வு வாகனம்

 தேர்தலுக்கு தயாராகும் விழிப்புணர்வு வாகனம்

 தேர்தலுக்கு தயாராகும் விழிப்புணர்வு வாகனம்


ADDED : மார் 23, 2026 07:54 PM

Google News

ADDED : மார் 23, 2026 07:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், வாக்காளர்களிடம் தேர்தல் விழிப்புணர்வுக்காக செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வாகனங்களை தயார் செய்யும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சட்டசபை பொது தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாவட்ட தேர்தல் அலுவலர் ேஷக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தலின் பேரில், அனைத்து துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள், தேர்தல் பணிகளிலும், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விளம்பரங்கள், ஊர்வலம், கூட்டம் ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதையொட்டி, விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், வாக்காளர்களுக்கு தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, செய்தி மக்கள் தொடர்பு துறை வாகனம் தயார் செய்யும் பணிகள் நடைபெற்றது.

இந்த வாகனத்தில் இருந்த தமிழக அரசின் சாதனை திட்டங்கள் அனைத்தும் சட்டசபை பொதுத்தேர்தல் தேதியை குறிப்பிட்ட ஸ்டிக்கர்கள் மூலம் மறைத்தும் வாக்காளர் விழிப்புணர்வு வாகனம் என ஸ்டிக்கர் ஒட்டியும் தயார் செய்தனர்.

மேலும், இந்த வாகனத்தில் தேர்தல் விழிப்புணர்வு எல்.இ.டி., திரை மூலம் ஒளிபரப்பு செய்தும், மாவட்டம் முழுதும் வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு செய்வதற்காக ஏற்பாடுகள் நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us