/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு மருத்துவமனையில் வளைகாப்பு விழா
/
அரசு மருத்துவமனையில் வளைகாப்பு விழா
ADDED : ஆக 16, 2025 11:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
செஞ்சி அரசு மருத்துவமனை மற்றும் வேட்டவலம் லயன்ஸ் சங்கம் சார்பில் செஞ்சியில் நடந்த விழாவிற்கு, தலைமை மருத்துவ அலுவலர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார்.
ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி முன்னிலை வகித்தனர். டாக்டர் கார்பச்சோ வரவேற்றார்.
மஸ்தான் எம்.எல்.ஏ., வளைகாப்பு நிகழ்ச்சியை துவக்கி வைத்து, சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வினோத், துளசி, சரண்ராஜ், செவிலியர்கள், தி.மு.க., நிர்வாகிகள் சேகர், அய்யாதுரை, பாஷா, ராமதாஸ், கோகுல், பிரபா, செல்லன் பங்கேற்றனர்.