/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பாதாள சாக்கடை பணியை முடிக்க கெடு; நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆவேசம்
/
பாதாள சாக்கடை பணியை முடிக்க கெடு; நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆவேசம்
பாதாள சாக்கடை பணியை முடிக்க கெடு; நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆவேசம்
பாதாள சாக்கடை பணியை முடிக்க கெடு; நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆவேசம்
ADDED : ஜன 13, 2024 04:10 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் பாதாள சாக்கடை பணிகளை ஒரு மாதத்தில் முடிக்கா விட்டால், போராட்டம் நடத்துவோம் என நகர மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசினர்.
விழுப்புரம் நகராட்சியில் நகரமன்ற கூட்டம் நடந்தது. நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். கமிஷனர் ரமேஷ் மற்றும் அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், கவுன்சிலர் கள் கோரிக்கை மற்றும் புகார் குறித்து பேசியதாவது:
விழுப்புரம் நகரில் பாதாள சாக்கடைப் பணிகள் தொடங்கி, 16 ஆண்டு களாக முடிக்காமல் இன்னும் நடைபெற்று வருகிறது. பணிகளை முடிக்காத தால் சாலை போடப் படாமல் பல ஆண்டுகள் பிரச்னை தொடர்கிறது.
அதனைத் தொடர்ந்து பெரும்பாலான கவுன்சிலர்கள் பாதாள சாக்கடை பணிகள் முடித்தும், தற்காலிகமாக சாலை சீரமைக்காமல் உள்ளது.
ஒரு மாத காலத்திற்குள் பாதாள சாக்கடை பணிகளை முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் அனைத்து கவுன்சிலர்களும் சேர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றனர்.
அதனைத் தொடர்ந்து நகரமன்ற தலைவர், 'பாதாள சாக்கடை திட்டப் பணியை எப்போதுதான் முடிப்பீர்கள். கடந்தாண்டு நவம்பர், டிசம்பரில் மழையை காரணம் காட்டினீர்கள், இந்தாண்டும் மழையை காரணம் காட்டுகிறீர்கள்.
சொல்லியபடி இந்த முறையாவது பணிகளை முடிக்க வேண்டும். அப்போதுதான், நாங்கள் அதில் புதிய சாலை பணியை தொடங்க முடியும். பொதுமக்களிடம் பதில் கூற முடியவில்லை' என்றார்.
அதற்கு குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள், 'வரும்பிப்ரவரிக்குள் பணிகள் முடிக்கப்படும்' என உறுதி யளித்தனர்.