/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தடுப்பு கட்டை மீது பைக் மோதல்; பேக்கரி ஊழியர் பலி
/
தடுப்பு கட்டை மீது பைக் மோதல்; பேக்கரி ஊழியர் பலி
ADDED : ஏப் 30, 2025 12:20 AM
வானூர்: கிளியனூர் அருகே தடுப்பு கட்டையில் பைக் மோதிய விபத்தில், பேக்கரி ஊழியர் உயிரிழந்தார்.
திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டை குறுக்கு தெருவை சேர்ந்தவர் மோகனசுந்தரம் மகன் இந்திரன், 38; பேக்கரி ஊழியர். நேற்று மதியம் வேலையை முடித்து விட்டு ஸ்கூட்டரில், புதுச்சேரி-திண்டிவனம் சாலை வழியாக வீடு திரும்பினார்.
மொளசூர் தனியார் ஓட்டல் எதிரில் சென்றபோது, இந்திரன் ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டை மீது மோதியது. கிழே விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்த இந்திரன், சம்பவ இடத்திலே உயிரிழந்தார். கிளியனூர் போலீசார் இந்திரன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

