ADDED : மார் 04, 2024 12:14 AM
அ நிறம் | அளவு
விக்கிரவாண்டி : ராதாபுரத்தில் வேளாண்மைக் கல்லுாரி மாணவர்கள், கூட்டுறவு வங்கியின் செயல்பாடு குறித்து பயிற்சி பெற்றனர்.
காரைக்கால் பண்டிட் ஜவகர்லால் நேரு வேளாண்மைக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவர்கள் 25 பேர் 3 மாதம் அனுபவ பயிற்சி பெற விக்கிரவாண்டி ஒன்றியத்தில் களப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
நேற்று ராதாபுரத்தில் நடந்த பயிற்சி முகாமில், ஓய்வு பெற்ற கூட்டுறவு சார்பதிவாளர் ராமமூர்த்தி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் குறித்தும், விவசாயிகள் பயிர் கடன், நகைக் கடன், கிசான் கடன் அட்டை குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.
