தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் :பா.ம.க., வேட்பாளர் சிவக்குமார் உறுதி

அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் :பா.ம.க., வேட்பாளர் சிவக்குமார் உறுதி

அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் :பா.ம.க., வேட்பாளர் சிவக்குமார் உறுதி


ADDED : ஏப் 09, 2026 05:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 05:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதிக்கு கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவேன் என விக்கிரவாண்டி தொகுதி பா.ம.க., வேட்பாளர் சிவக்குமார் பிரசாரம் மேற்கொண்டார்.

விக்கிரவாண்டி தொகுதி குத்தாம்பூண்டி, ரெட்டிகுப்பம், கயத்துார், ஆவுடையார் பட்டு, வெட்டுக்காடு, ராதாபுரம், எம்.குச்சிபாளையம், விஸ்வரெட்டிப்பாளையம், மதுரப்பாக்கம், மூங்கில்பட்டு உட்பட பல்வேறு கிராமங்களில் நடந்த பிரசாரத்தில் அவர் பேசுகையில், 'மயிலம் தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக பணியாற்றி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி ஒரு முன்மாதிரியான தொகுதியாக மாற்றியுள்ளேன்.

தற்போது விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடுகிறேன். தொகுதியில் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண வருகின்ற அ.தி.மு.க., ஆட்சியில் மத்திய அரசின் பா.ஜ., ஆதரவோடு அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றித் தருவேன்' என்றார்.

பா.ம.க., தொகுதி பொறுப்பாளர் ஆலயமணி, மாவட்ட தலைவர் புகழேந்தி, மாநில அமைப்பு துணைச் செயலாளர் பழனிவேல், ஒன்றிய செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன் செல்வகுமார், சுரேஷ், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் பன்னீர், முகுந்தன், பா.ஜ., மாவட்ட பொருளாளர் முருகன் உட்பட பலர் பங்கேற்னர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us