நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம்: மீன்பிடி தடைக்காலம் துவங்கியதால் கோட்டக்குப்பம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், கோட்டக்குப்பம் பகுதியில் 19 மீனவ கிராமங்கள் உள்ளது. ஆண்டு தோறும் மீன் வளத்தை உயர்த்துவதிற்காக, கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரம் 14ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை மீன் பிடிக்க தடைக்காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மீன்பிடி தடைக்காலம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. விழுப்புரம் மாவட்டட கடற்கரையோர மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. நாட்டுப் படகுகள், சிறிய படகுகள் வழக்கம்போல மீன்பிடித் தொழிலில் ஈடுபடுட்டு வருகின்றது.