/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காரில் கஞ்சா வைத்திருந்த பெங்களூரு வாலிபர் கைது
/
காரில் கஞ்சா வைத்திருந்த பெங்களூரு வாலிபர் கைது
ADDED : ஜன 20, 2025 06:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானூர்: காரில் கஞ்சா வைத்திருந்த பெங்களூரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆரோவில் போலீசார் நேற்று முன்தினம் இரவு இடையஞ்சாவடி சாலை சந்திப்பில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே வந்த சுசூகி சியாஸ் காரை நிறுத்தி, டிரைவரை சோதனை செய்தனர். அதில், அவரது பாக்கெட்டில் 60 கிராம் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், பெங்களூரு இந்திரா நகர் கீதாஞ்சலி லே அவுட்டை சேர்ந்த சுமன்குமார் சிங் மகன் சித்தார்த்தா சுமன்,33; என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து சித்தார்த்தா சுமனை கைது செய்தனர். மேலும், அவர் ஓட்டி வந்த காரையும் பறிமுதல் செய்தனர்.