ADDED : ஜன 01, 2024 12:22 AM
விழுப்புரம் : புதுச்சேரி மாநிலத்தில் நடந்த அகில இந்திய அளவிலான பீமா கோப்பை கராத்தே போட்டியில், விழுப்புரம் வீரர்கள் சாதனை படைத்தனர்.
அகில இந்திய அளவில் பீமா கோப்பை கராத்தே போட்டி புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் தனியார் கலைக் கல்லுாரியில் நடந்தது.
இதில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து 38 மாவட்டங்களைச் சேர்ந்த கராத்தே வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
போட்டியில், விழுப்புரம் ஜார்ஜ்னேஷன் கிளப் பயிற்சி மைய பயிற்சியாளர் செல்வகுமாரிடம், பயிலும் மாணவர்கள் அரிஹரன், ஷேக் ஆப்தாப், கமலேஷ், சந்தோஷ், விக்னேஸ்வரன், மோனேஷ், நித்திஷ், ஜேசன் மேத்தீவ், பாவேஷ், பிரகதீஸ்வரன், கதிர்நிலவன், ஆதவன், சஞ்சய், சபரீஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில், கட்டா பிரிவில் 12 மாணவர்களும், குமித்தே பிரிவில் 14 மாணவர்களும் வென்று கேடயம், சான்றிதழ் பெற்றனர். வெற்றி பெற்ற கராத்தே வீரர்களை பயிற்சியாளர் செல்வகுமார், முன்னாள் பயிற்சியாளர் வைத்தியநாதன் வாழ்த்தினர்.