/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை
/
அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை
அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை
அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை
ADDED : செப் 25, 2025 03:30 AM
செஞ்சி : வல்லம் அடுத்த இல்லோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 99 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக நான்கு வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது.
ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் இந்திரா பழனி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் அருள் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து, பணிகளை துவக்கி வைத்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, மாவட்ட அவைத் தலைவர் சேகர், தலைமை தீர்மானக் குழு உறுப்பினர் சிவா, ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, துரை, இளம்வழுதி, உதவி செயற்பொறியாளர் கற்பகம், உதவி பொறியாளர் அரவிந்த், மாவட்ட கவுன்சிலர் அன்புச்செழியன், ஒன்றிய கவுன்சிலர் பத்மநாபன், அமைப்பு சார் தொழிலாளர் அணி தமிழரசன், ஒப்பந்ததாரர் முருகேசன், நிர்வாகிகள் வெங்கடேசன், பாண்டியராஜன், ஜானகிராமன், கார்வண்ணன் மற்றும் ஆசிரியர்கள், கிராம பொது மக்கள் பங்கேற்றனர்.