/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை
/
பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை
ADDED : பிப் 21, 2024 10:29 PM

திண்டிவனம்: திண்டிவனம் வால்டர் ஸ்கேடர் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.25 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.
திண்டிவனத்தை சேர்ந்த அ.தி.மு.க.,ராஜ்சபா உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சண்முகத்தின் எம்.பி.,மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம், திண்டிவனத்திலுள்ள வால்டர் ஸ்கேடர் மேல்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் மற்றும் விளையாட்டு ஓடுதளம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டது.
இதற்கான பூமி பூஜை நேற்று காலை பள்ளி வளாகத்தில் நடந்தது. திண்டிவனம் எம்.எல்.ஏ.,அர்ஜூனன் தலைமை தாங்கி பூமி பூஜையை துவக்கி வைத்தார்.
இதில் நகராட்சி பொறியாளர் பவுல்செல்வம், பள்ளியின் தலைமையாசிரியர் தேவநேசன், உதவி தலைமையாசிரியர் மோகன், முன்னாள் கவுன்சிலர் குமார், ஆசிரியர்கள் டேவிட்செல்லப்பா, சாமுவேல், ஆசிரியர் சங்க தலைவர் அறிவொளி, உடற்கல்வி ஆசிரியர்கள் பிரான்சிஸ் சாமுவேல், பிரேம்குமார், மேலாளர் ஜெபராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.