ADDED : பிப் 13, 2024 05:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட வானக்கொட்டகை கல்லுாரி சாலையில் புதிய தார் சாலை பணிக்கான பூமி பூஜை நடந்தது.
திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சிக்குட்பட்ட 9வது வார்டு பகுதியில் ஒரு கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார் பணிக்கான பூமி பூஜை நேற்று காலை நடந்தது. விழாவில் பேரூராட்சி சேர்மன் அஞ்சுகம் கணேசன் பூமி பூஜை நடத்தி பணியை துவக்கி வைத்தார்.
நகர செயலாளர் கணேசன், துணைச் சேர்மன் ஜோதி, வார்டு கவுன்சிலர்கள் ரகமத்துன்னிசா ஷாஜகான், கமலா கலியபெருமாள், அறிவு, விருத்தாம்பாள் நாவன், நகர நிர்வாகிகள் கிருஷ்ணராஜ், செல்வம், நாசர், சுலைமான் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.