/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நள்ளிரவில் பைக் எரிப்பு கோட்டக்குப்பத்தில் பரபரப்பு
/
நள்ளிரவில் பைக் எரிப்பு கோட்டக்குப்பத்தில் பரபரப்பு
நள்ளிரவில் பைக் எரிப்பு கோட்டக்குப்பத்தில் பரபரப்பு
நள்ளிரவில் பைக் எரிப்பு கோட்டக்குப்பத்தில் பரபரப்பு
ADDED : ஏப் 24, 2025 05:32 AM

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அருகே நள்ளிரவில் பைக் எரிந்து நாசமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோட்டக்குப்பம் அடுத்த நம்பிக்கை நல்லூரை சேர்ந்தவர் சுகேஷ். இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பரான பிள்ளைச்சாவடி மாதேஷின், யமாகா ஆர்ஒன்5 என்ற பைக்கை வாங்கிக்கொண்டு தனது வீட்டிற்கு சென்றார். வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தி விட்டு நண்பர்களுடன் கடற்கரைக்குச் சென்றார்.
நள்ளிரவு சுகேஷ் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டு இருந்த பைக் திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்பகுதி மக்கள், தீயை அணைத்தனர். கடற்கரையில் இருந்து சுகேஷ் வந்து பார்த்த போது, பைக் முற்றிலுமாக எரிந்து எலும்பு கூடு போல் காட்சியளித்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சுகேஷ் கொடுத்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைக்கிற்கு யாரேனும் தீ வைத்தார்களா அல்லது வெப்பத்தின் காரணமாக தீப்பிடித்து எரிந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

