/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
லாரி மீது பைக் மோதல்: வாலிபர் பரிதாப பலி
/
லாரி மீது பைக் மோதல்: வாலிபர் பரிதாப பலி
ADDED : பிப் 11, 2024 10:53 PM
திருவெண்ணெய்நல்லுார்: பைக்கில் சென்றவர்கள் முன்னால் சென்ற லாரியை முந்த முயன்ற போது, விபத்தில் சிக்கியதில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த ஆத்துார் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன் மகன் அஜித், 23; இவரும் அதே கிராமத்தை நண்பரான ஆனந்தன் மகன் அரவிந்த், 19; மற்றும் உளுத்தாண்டார்கோவில் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகன் அஜி, 21; ஆகியோர் நேற்று மாலை 5:30 மணியளவில் திருவெண்ணெய்நல்லுாரில் இருந்து பெரியசெவலை நோக்கி பைக்கில் சென்றனர். அஜித் பைக் ஓட்டினார். இவர்கள் திருவெண்ணெய்நல்லுார் அய்யனார் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றனர்.
அப்போது லாரியில் உரசி சக்கரத்தில் சிக்கி கொண்டனர். அப்போது அஜி உடல் நசுங்கி உள்ளது.
மேலும் அஜித் மற்றும் அரவிந்த் படுகாயமடைந்துள்ளனர்.தகவலறிந்த திருவெண்ணெய்நல்லுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர்.
இதில் ஆனந்தன் மகன் அஜி சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.