/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சென்டர் மீடியனில் பைக் மோதல்; சென்னை வாலிபர்கள் 2 பேர் பலி
/
சென்டர் மீடியனில் பைக் மோதல்; சென்னை வாலிபர்கள் 2 பேர் பலி
சென்டர் மீடியனில் பைக் மோதல்; சென்னை வாலிபர்கள் 2 பேர் பலி
சென்டர் மீடியனில் பைக் மோதல்; சென்னை வாலிபர்கள் 2 பேர் பலி
ADDED : பிப் 16, 2024 07:20 AM

திண்டிவனம் : திண்டிவனம் அருகே சென்ட்டர் மீடியனில் பைக் மோதியதில் சென்னை வாலிபர்கள் 2 பேர் இறந்தனர்.
சென்னை, குன்றத்துார் அடுத்த நல்லுாரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் பாலாஜி, 23; எலக்ட்ரீஷியன். அதே பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் மகன் கார்த்திக், 24; மினி சரக்கு வேன் டிரைவர். நண்பர்களான இருவரும், சொந்த வேலை காரணமாக நேற்று முன்தினம் யமஹா பைக்கில் சேலம் சென்று, அங்கிருந்து இரவு சென்னை திரும்பினர்.
நள்ளிரவு 1:45 மணியளவில், சென்னை சாலையில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், சலவாதி அருகே அதிவேகமாக வந்தபோது, திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்து, சென்ட்டர் மீடியனில் மோதி, சாலையோரம் இருந்த மைல் கல் மீது மோதியது.இதில் இருவரும் 50 மீட்டர் துாரத்திற்கு துாக்கியெறியப்பட்டு கீழே விழுந்தனர். அதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். விபத்தில் இறந்த இருவருக்கும் திருமணமாகவில்லை.
விபத்து குறித்து ரோஷணை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.