நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் நிறுத்தியிருந்த பைக் திருட்டுபோனது.
விழுப்புரம் அடுத்த தோகைப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் சிவபிரகாஷ்,38; கொத்தனார்.
இவர், கடந்த 17ம் தேதி காலை, விழுப்புரம் ரயில் நிலைய டிக்கெட் கவுன்டர் அருகே தனது பைக்கை நிறுத்திவிட்டு, உள்ளே சென்று வந்தார். மீண்டும் வந்து பார்த்தபோது, அங்கு நிறுத்தியிருந்த பைக் திருட்டுபோனது தெரிந்தது.
இதுகுறித்து, சிவபிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

