/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதிய பைபாஸ் சாலையில் பைக் ரேஸ்; விபத்துகள் தொடர்வதால் அச்சம்
/
புதிய பைபாஸ் சாலையில் பைக் ரேஸ்; விபத்துகள் தொடர்வதால் அச்சம்
புதிய பைபாஸ் சாலையில் பைக் ரேஸ்; விபத்துகள் தொடர்வதால் அச்சம்
புதிய பைபாஸ் சாலையில் பைக் ரேஸ்; விபத்துகள் தொடர்வதால் அச்சம்
ADDED : நவ 05, 2024 07:05 AM

விழுப்புரம் புதிய பைபாஸ் சாலையில் பைக் ரேஸ், சாகசங்கள் நடப்பதால் விபத்துகள் ஏற்படும் அச்சநிலை தொடர்ந்துள்ளது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இதில், விழுப்புரம்-புதுச்சேரி இடையே சாலைப் பணிகள் முடிந்து தற்காலிகமாக வாகனங்கள் இயங்கி வருகிறது. இதில், விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம் பாலம் முதல் வளவனூர் அடுத்த கெங்கராம்பாளையம் வரை, புதிய பைபாஸ் சாலை அமைக்கப்பட்டு, தற்காலிகமாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே சாலை திறக்காமல் இருந்ததால், குறைந்தளவு வாகனங்கள் இயங்கி வந்தன.
சாலை புத்தம் புதிதாக, காலியாக இருந்ததால், ஏராளமான வாகன ஓட்டிகளின் பயிற்சி தளமாகவும், இரு சக்கர வாகன சாகசம் நிகழ்த்தும் சாலையாகவும் இருந்தது.
இந்த நிலையில், கண்டமங்கலம் ரயில்வே பாலம் முடிந்து, கடந்த மாதம் திறக்கப்பட்டதிலிருந்து, தற்போது, விழுப்புரம்-புதுச்சேரி புதிய பை பாஸ் சாலையில் அதிகளவில் வாகனங்கள் சென்று வருகிறது.
இப்போதும், இரு சக்கர வாகன ஓட்டிகள் சிலர், அதிவேகமாக சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிலர் அதிவேக சாகசத்தில் ஈடுபடுவதும், மாலை, இரவு நேரங்களில் அதிக சத்தத்துடன் ஹார்ன் ஒலி எழுப்பிச் செல்வதால், சாலையோரமுள்ள குடியிருப்பு வாசிகள் அச்சப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
ஜானகிபுரம் முதல் கெங்கராம்பாளையம் வரை இப்படி அடிக்கடி சாகசங்கள் நடக்கிறதாம்.
சிலர் பைக் ரேஸ் நடத்தும் அவலமும் நடப்பதாகவும் அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர். இந்த புதிய பைபாசில், சிலர் விதிகளை மீறி எதிர் திசையில் வாகனங்களை இயக்கி வருவதால், அடிக்கடி விபத்துகள் நடந்து, 10க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் நடந்துள்ளதாக போலீசாரே கூறுகின்றனர். இதனால், புதிய பைபாஸ் சாலையில் போலீசார், போக்குவரத்து துறையினர் கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

