நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்,; விழுப்புரம் அருகே வீட்டில் நிறுத்தியிருந்த பைக் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் ் அடுத்த முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் ஜெயஜோதி மகன் அருண்குமார், 25; தனியார் நிறுவன ஊழியர்.
இவர், கடந்த 23ம் தேதி இரவு, வழக்கம் போல், தனது யமகா பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தி பூட்டி வைத்திருந்தார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, அந்த பைக் திருட்டு போயிருந்தது.
இது குறித்து, புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.