நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்; வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தென்கொளப்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் ஹரிஷ் குமார். இவருக்கு சொந்தமான யமஹா பைக்கை தனது வீட்டின் எதிரில் நிறுத்தியிருந்தார். அடுத்த நாள் பார்த்த போது, பைக்கை யாரோ திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.