நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: ஜிம் அருகே நிறுத்தியிருந்த பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் நித்தியானந்தம் தெருவை சேர்ந்தவர் கண்ணன், 50; இவர், திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஜிம் அருகில் தனது பைக்கை நிறுத்திவிட்டு சென்றார்.
சில நிமிடம் கழித்து திரும்பிவந்து பார்த்தபோது பைக்கை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.