/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக் திருடனுக்கு தர்ம அடி: விழுப்புரம் அருகே பரபரப்பு
/
பைக் திருடனுக்கு தர்ம அடி: விழுப்புரம் அருகே பரபரப்பு
பைக் திருடனுக்கு தர்ம அடி: விழுப்புரம் அருகே பரபரப்பு
பைக் திருடனுக்கு தர்ம அடி: விழுப்புரம் அருகே பரபரப்பு
ADDED : ஏப் 17, 2025 05:16 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பைக் திருடிய வாலிபருக்கு, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து, மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விழுப்புரம் அடுத்த பிடாகம் குச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் சத்தியமூர்த்தி, 26; இவரது பைக்கை நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதையறிந்த, சத்தியமூர்த்தி மற்றும் பொதுமக்கள் அப்பகுதி சாலைகளில் பைக்கை தேடினர்.
திருடப்பட்ட சத்தியமூர்த்தி பைக்கில் பெட்ரோல் இல்லாததால், பைக்கை திருடிய 3 மர்ம நபர்கள், வேறு பைக் மூலம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பிடாகம் சர்வீஸ் சாலையில் டோப் செய்து எடுத்துச்சென்றது தெரிந்தது.
இதைக்கண்ட சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் துரத்தியபோது, இரண்டு பைக்குகளையும் கீழே போட்டுவிட்டு மூவரும் தப்பித்து ஓடினர்.
அதில், ஒரு வாலிபரை மடக்கி பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருவர் தப்பியோடினர். மர்ம நபர்கள் விட்டு சென்ற பையில் இரண்டு இரும்பு ராடுகள், ஒரு பஞ்சர் லிவர், மொபைல்போன் இருந்தது.
விழுப்புரம் தாலுகா போலீசார் இரண்டு பைக்குகள் மற்றும் பேக்கை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.