ADDED : ஏப் 16, 2026 11:04 PM
அ நிறம் | அளவு
அவலுார்பேட்டை: வளத்தி அருகே வேன் மோதி பைக்கில் சென்றவர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மே ல்மலையனுாரைச் சேர்ந்த முத்து, 49; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு 10:00, மணிக்கு மேல்மலையனுார்- வளத்தி சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த மினி டோர் வேன் முத்து ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த முத்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
புகாரின் பேரில் மேல்மலையனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
