ADDED : மார் 13, 2024 06:38 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம் : விழுப்புரத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட தகராறில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம், வி.மருதுார் பகுதியைச் சேர்ந்தவர் பூங்காவனம் மகன் வெங்கடேசன், 19; இவர், நேற்று முன்தினம் அதே பகுதியில் கிரிக்கெட் விளையாடினார். அப்போது அதே பகுதியை சேர்ந்த தீனா,18; என்பவர் பைக்கில் சென்றபோது, வெங்கடேசனின் காலில் வாகனத்தை ஏற்றியுள்ளார். இதனால், ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினராக தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில் விழுப்புரம் டவுன் போலீசார், 6 பேர் மீது வழக்குப் பதிந்து, வெங்கடசன், தீனா, கணபதி, 20; மணிபாரதி, 20; ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
