/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.ம.மு.க., பொதுச்செயலாளர் பிறந்த நாள் விழா
/
அ.ம.மு.க., பொதுச்செயலாளர் பிறந்த நாள் விழா
ADDED : டிச 14, 2024 03:50 AM

வானுார்: அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரனின் 61வது பிறந்த நாள் விழா விழுப்புரம் கிழக்கு மாவட்ட அ.ம.மு.க., சார்பில் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில், தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, தீவனுார் நான்குமுனை சந்திப்பில் இனிப்பு வழங்கப்பட்டது.
விழாவை முன்னிட்டு விழுக்கம், பொன்னம்பூண்டி, குன்னம் பகுதிகளில் கட்சிக் கொடியேற்றி, 100க்கும் மேற்பட்டோருக்கு சேலை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, மாநில வர்த்தக அணி துணை தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் எத்திராஜ் முன்னிலை வகித்தனர்.
மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார், வல்லம் மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ், வானுார் வடக்கு ஒன்றிய செயலாளர் கதிர்வேல், தலைமைக் கழக பேச்சாளர் டேவிட் பிரவின் குமார் மற்றும் அணி செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.