/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கூட்டேரிப்பட்டில் பா.ஜ., ஆலோசனை கூட்டம்
/
கூட்டேரிப்பட்டில் பா.ஜ., ஆலோசனை கூட்டம்
ADDED : பிப் 01, 2024 05:29 AM

மயிலம்: மயிலம் கூட்டேரிப்பட்டில் பா.ஜ.,வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் கிராமங்கள் தோறும் செல்லுதல் நிகழ்ச்சி மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
மாவட்ட பொதுச்செயலாளர் பாண்டியன், மகளிர் அணி மாநில செயலாளர் சுபஸ்ரீ, மாவட்ட துணை தலைவர் ராதே கோகுல் முன்னிலை வகித்தனர். சட்டசபை தொகுதி அமைப்பாளர் செல்வகுமார் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் சந்திரலேகா, மகளிர் அணி மாவட்ட தலைவி அருளரசி, இளைஞர் அணி மாவட்ட தலைவர் ஜீவானந்தம், தொகுதி இணை அமைப்பாளர் ராதிகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கிராமங்கள் தோறும் சென்று பூத் அளவில் குழுக்கள் அமைத்தல், பொறுப்பாளர்கள் பொதுமக்களை சந்தித்து மத்திய அரசு திட்டங்களை எவ்வாறு எடுத்துரைக்க வேண்டும் என்பது குறித்து கலந்து ஆலோசனை செய்தனர்.