ADDED : பிப் 23, 2024 03:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அரசூரில் பா.ஜ., ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் கதிரவன் தலைமை தாங்கினார். பொருளாளர் பிரசாத், பொதுச்செயலாளர்கள் ராஜதுரை, ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர்கள் வினோத், கண்ணன், குமார், ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட பொதுச்செயலாளர் முருகன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.