ADDED : மே 14, 2025 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டிவனத்தில் நடந்தது.
மதுரையில் வரும் 22ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடக்க உள்ளது. மாநாட்டில் பங்கேற்பது தொடர்பாக, பா.ஜ., விழுப்புரம் மாவட்ட மற்றும் மண்டல பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் திண்டிவனத்தில் நடந்தது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் விநாயகம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் மீனாட்சி நித்திய சுந்தர் சிறப்புரையாற்றினார்.
நகர தலைவர் வெங்கடேசபெருமாள், தொழில் பிரிவு கோபிநாத், முன்னாள் மாவட்ட தலைவர்கள் கலிவரதன், ராஜேந்திரன் உள்ளிட்ட பா.ஜ., மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.