/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காவல்துறையை முதல்வர் கவனிக்கவில்லை பா.ஜ., ஒருங்கிணைப்பாளர் குற்றச்சாட்டு
/
காவல்துறையை முதல்வர் கவனிக்கவில்லை பா.ஜ., ஒருங்கிணைப்பாளர் குற்றச்சாட்டு
காவல்துறையை முதல்வர் கவனிக்கவில்லை பா.ஜ., ஒருங்கிணைப்பாளர் குற்றச்சாட்டு
காவல்துறையை முதல்வர் கவனிக்கவில்லை பா.ஜ., ஒருங்கிணைப்பாளர் குற்றச்சாட்டு
ADDED : செப் 29, 2024 06:17 AM
திண்டிவனம்: திண்டிவனத்தில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற, பா.ஜ., மாநில ஒருங்கிணைப்பாளர் ஹெச். ராஜா அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தமிழக சாலை போக்குவரத்து மேம்பாட்டிற்காக 85 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அறிவித்துள்ளார்.
எப்போதும் மத்திய அரசு தமிழக அரசுக்கு உதவி செய்து வருகிறது.
பிரதமரிடம் பேசும்போது, தி.மு.க., இருமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் என முதல்வர் கூறியிருக்கிறார். முதல்வரின் மகள் நடத்தும் பள்ளி இரு மொழிக்கொள்கையை கடைபிடிக்கிறதா. தி.மு.க., தமிழக மக்களை ஏமாற்றுகிறது.
தமிழ்நாட்டில் நடக்கும் என்கவுன்டர்களுக்கு புதிய நடைமுறை வந்துள்ளது. கஸ்டடி உயிரிழப்பு தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது. முதல்வர் தன் பொறுப்பில் உள்ள காவல் துறையை சரியாக கவனிக்கவில்லை.
அவர் தன் கடமையிலிருந்து தவறி இருக்கிறார். நீதிமன்றமும் கண்டித்துள்ளது. முதல்வர் போலீஸ் துறையின் மீது கவனம் செலுத்துவது நல்லது.
திருமாவளவன் ஜாதிய வட்டத்திலிருந்து வெளியே வந்து, மக்களுக்கான கட்சியாக அவர் மாறட்டும். மதுக்கடையை திறந்தவர்கள் தி.மு.க.,காரர்கள். அவர்கள்தான் மதுக்கடைகளை மூடவேண்டும்.
மது உற்பத்தி மற்றும் விற்பனை செய்பவர்களைக் கூப்பிட்டு மேடையில் உட்கார வைத்து, வரும் 2ம் தேதி வி.சி., மாநாடு நடத்தப் போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது விழுப்புரம் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், ஸ்ரீராம் பள்ளி சேர்மன் முரளி ரகுராமன் உடனிருந்தனர்.