/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ஜ.,தலைவர் நிவாரண உதவி
/
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ஜ.,தலைவர் நிவாரண உதவி
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ஜ.,தலைவர் நிவாரண உதவி
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ஜ.,தலைவர் நிவாரண உதவி
ADDED : டிச 05, 2024 07:14 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு பா.ஜ.,மாநில தலைவர் நிவாரண உதவிகள் வழங்கினார்.
பெஞ்சல் புயலால் திண்டிவனம் நாகலாபுரம் பகுதியை சேர்ந்த குடியிருப்பு பகுதியில் கிடங்கல் ஏரியில் ஏற்பட்ட உடைப்பால் வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட இடங்களை பா.ஜ.,மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
ஓமந்துார் ஸ்ரீராம் பள்ளி தாளாளர் முரளிரகுராமன் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில் , மாநில துணை தலைவர் சம்பத், கோட்ட பொருப்பாளர் மனோஜ்செல்வம், மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாநில விளையாட்டு அணி ஹரிகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் எத்திராஜ், திண்டிவனம் நகர தலைவர் வெங்கடேசபெருமாள்,மாநில இளைஞரணி தினேஷ்குமார், தென்கோடிப்பாக்கம் பஞ்சாயத்துதலைவர் ராஜசேரன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.