ADDED : ஜூலை 21, 2026 03:59 AM

அ நிறம் | அளவு
திண்டிவனம்: கோவில்களில் நடைபெறும் முறைகேட்டை கண்டித்து, பா.ஜ., பிரசார பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டிவனம் தாலுகா அலுவலகம் எதிரில் நேற்று மாலை நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பிரசார பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். பா.ஜ., மாவட்ட துணைத் தலைவர் எத்திராஜ் வரவேற்றார்.
கரூர், பழனி கோவில்களில் நடைபெற்று வரும் முறைகேட்டை கண்டித்து, பா.ஜ., மாநில பிரசார பிரிவு தலைவர் பாண்டிராஜன், மாநில செயலாளர் தினேஷ்குமார் ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், பொதுச் செயலாளர் அன்பழகன், வழக்கறிஞர் அணி செந்தில், இளைஞரணி பிரபு, வர்த்தகர் பிரிவு ராஜா நிர்வாகிகள் முத்துலட்சுமி, ராதிகா, விஜயலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
