ADDED : மே 28, 2025 11:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: ஆப்பரேஷன் சிந்துார் வெற்றிக்காக, இந்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் விளக்கு ஏந்தி மகளிர் பேரணி நடந்தது.
திருச்சிற்றம்பலம் கூட்ரோடு விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்ட பேரணிக்கு, மாவட்ட தலைவர் விநாயகம் தலைமை தாங்கினார். வானுார் ஒன்றிய தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். 30க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, விளக்கு ஏந்தி, திருச்சிற்றம்பலம் பகுதியில் பேரணியாக சென்றனர்.
மாவட்ட பொதுச்செயலாளர் பிரேம்நாதன், மாநில பொதுக்குழு ராதிகா, மகளிர் அணி ஒன்றிய தலைவி சென்னம்மாள், மாவட்ட மகளிர் அணி தலைவி அருளரசி, நிர்வாகிகள் இளங்கோ, ஆதிமுத்து, மனோகர், சவுரிராஜன், செந்தில்குமார், ராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.