/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பார்வையற்ற ஆசிரியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
/
பார்வையற்ற ஆசிரியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 23, 2024 10:16 PM

விழுப்புரம் : விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட 'பிளைன்ட் பிசிகல் வெல்பர் சொசைட்டி' சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையேற்றோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தலைவர் சிங்காரவேலன் தலைமை தாங்கினார்.
பொதுச் செயலாளர் ரூபன்முத்து, துணைத் தலைவர் ராமராஜன் முன்னிலை வகித்தனர். இணைச் செயலாளர் பாலு, பொருளாளர் நாகராஜ் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஒருங்கிணைந்த அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை கணக்கிட்டு அதில், பார்வையற்றோருக்கு 1 சதவீதம் இட ஒதுக்கீட்டை சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு, சிறப்பு முதுகலை ஆசிரியர் தேர்வு, ஆசிரியர் நியமனம் வழங்கிட வேண்டும்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன தேர்விலிருந்து முழுமையாக விலக்களித்து பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
துணைத் தலைவர் பரமேஸ்வரி நன்றி கூறினார்.