/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரத்த தான விழிப்புணர்வு அவசியம்: சமூக ஆர்வலர் பாஸ்கரன் தகவல்
/
ரத்த தான விழிப்புணர்வு அவசியம்: சமூக ஆர்வலர் பாஸ்கரன் தகவல்
ரத்த தான விழிப்புணர்வு அவசியம்: சமூக ஆர்வலர் பாஸ்கரன் தகவல்
ரத்த தான விழிப்புணர்வு அவசியம்: சமூக ஆர்வலர் பாஸ்கரன் தகவல்
ADDED : ஜூன் 07, 2024 06:37 AM
விழுப்புரம் : ரத்த தானம் செய்வதால், உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வுஏற்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன், 56; விவசாயி. சமூக ஆர்வலர். இவர், தனது 25 வயது முதல் ரத்த தானம் வழங்குவதில் ஆர்வம் செலுத்தி வருகிறார். ரத்ததானம் குறித்து அவர் கூறியதாவது: சென்னையில் அப்போலோ, ரேலா, குளோபல், பில்ராத் மற்றும் அடையார் புற்றுநோய் மருத்துவமனை,வி.எஸ்., மருத்துவமனை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்துாரார் அரசு மருத்துவமனை, எழும்பூர் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் 137 முறை ரத்த தானம் செய்துள்ளார். இதில், 107 முறை ரத்த தானமும், 30 முறை பிளேட்லெட் தேவைக்காக ரத்த தானம் செய்துள்ளேன்.
இத்துடன், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையை மையமாக கொண்டு 'பிளேட்லெட் டோனர்ஸ்' என்கிற ரத்த தான தன்னார்வ வாட்ஸ் ஆப் குழுவை ஒருங்கிணைத்துள்ளேன்.இதன் மூலம், தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் பயனடைந்துள்ளனர். மருத்துவ சிகிச்சைக்காக ரத்த தானம் தேவைப்படுவோர் எந்த நேரத்திலும், 96297 77719 என்கிற செல்போனில் தொடர்பு கொள்ளலாம்.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை எந்த வயதினரும் ரத்த தானம் செய்யலாம். ரத்த தானம் செய்வதால், நோயாளி காப்பாற்றப்படுவதுடன், ரத்த தானம் செய்பவர் மிகுந்த மன நிறைவை பெற முடியும். ரத்த தானத்தின் நன்மைகள் குறித்து, சமூக வலைதளத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு பாஸ்கரன் கூறினார்.