தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ரத்ததான முகாம்

ரத்ததான முகாம்

ரத்ததான முகாம்


ADDED : ஆக 21, 2026 08:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 08:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சூர்யா கல்வி குழும சேர்மன் கவுதம சிகாமணி பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடந்தது.

சூர்யா கல்லுாரி வளாகத்தில் நடந்த முகாமை, தாளாளர் விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கல்லுாரி துணை முதல்வர் ஜெகன் வரவேற்றார்.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ரத்த மைய மருத்துவ அலுவலர் விஜயா தலைமையிலான மருத்துவ குழுவினர், 70 மாணவர்களிடம் இருந்து ரத்த தானம் பெற்றனர்.

ரத்த தானம் வழங்கிய மாணவர்களுக்கு கல்லுாரி முதல்வர் சங்கர் சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில், மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டன.

கல்லுாரி முதல்வர் பாலாஜி ,ராதாபுரம் அரசு மருத்துவமனை அலுவலர் வெற்றிவேல், கல்லுாரி பேராசிரியர்கள், உட்பட பலர் பங்கேற்றனர்.

என்.எஸ்.எஸ்., அலுவலர் அழகுவேல் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us