
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினத்தையொட்டி ரத்ததான முகாம் நடந்தது.
அரசு மருத்துவமனையில் நடந்த முகாமிற்கு, வட்ட குழு தலைவர் மதன்ராஜ் தலைமை தாங்கினார்.
செயலாளர் ஜீவானந்தம் வரவேற்றார். மா.கம்யூ., முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி தொடங்கி வைத்தார்.
மா.கம்யூ., மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், மாவட்ட செயற்குழு முத்துக்குமரன், வட்ட செயலாளர் கண்ணப்பன் வாழ்த்திப் பேசினர். முகாமில், 50 பேர் ரத்த தானம் வழங்கினர்.
வாலிபர் சங்க மாவட்ட தலைவர் பிரகாஷ், செயலாளர் அறிவழகன், பொருளாளர் தேவநாதன், துணை தலைவர் முதலிவீரன் உட்பட பலர் பங்கேற்றனர்.